பிரனாப் முகர்ஜி இயற்கை எய்தினார்! தலைவர்கள் இரங்கல்!

31 August 2020 அரசியல்
pranabmukherjee.jpg

முன்னாள் பாரதப் பிரதமர் பிரனாப் முகர்ஜி, மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த 9ம் தேதி அன்று, வீட்டில் உள்ள குளியலறையில் வழுக்கி விழுந்த பிரனாப் முகர்ஜிக்குத் தலையில் பலத்த அடிபட்டது. இதனைத் தொடர்ந்து, அவர் டெல்லியில் உள்ள இராணுவ மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருடைய மூளையில் ரத்த போக்கு ஏற்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இருப்பினும், சிகிச்சைக்குப் பிறகு, அவருடைய உடலானது மிகவும் மோசமானது. தொடர்ந்து, தீவிர சிகிச்சையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில், அவருக்கு கொரோனா தொற்று இருந்ததன் காரணமாக, வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வந்தார். இருப்பினும், நாளாக நாளாக, அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டார். நேற்று ஆழ்ந்த கோமா நிலையில் இருப்பதாகவும், உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், மருத்துவமனை அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து, இன்று (31-08-2020) மாலையில், அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக, அவருடைய மகன் அபிஜித் பேனர்ஜி தெரிவித்துள்ளார். இவருடைய மறைவிற்கு, பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த் உள்ளிட்டப் பலரும் தங்களுடைய இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

HOT NEWS