பாஜகவானது வருகின்ற மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் இரண்டு இலக்கினைத் தொடாது என, பிரஷாந்த் கிஷோர் தெரிவித்து உள்ளார்.
மேற்கு வங்கம் மாநிலத்தில், விரைவில் சட்டமன்றத் தேர்தலானது நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவிற்கும் இடையில் நேரடிப் போட்டியானது நடைபெற ஆரம்பித்து உள்ளது. இரண்டு கட்சியினரும் ஒருவரை ஒருவர், மாறி மாறி குறைக் கூறி வருகின்றனர். கடந்த வாரம் மேற்கு வங்கம் வந்திருந்த பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டாவின் கார் தாக்கப்பட்டது. இது பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது.
இந்த சூழலில் பாஜக கட்சியினை நோக்கி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் சென்று வருகின்றனர். அந்தக் கட்சியினர் கட்சித் தாவலில் ஈடுபடுவதைத் தவிர்க்கும் பொருட்டு, மம்மதா பேனர்ஜி அக்கட்சியினருடன் ஆலோசனை நடத்தினர். இந்த சூழலில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்காக, பிரஷாந்த் கிஷோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். அவர், தற்பொழுது அந்தக் கட்சிக்காக தேர்தல் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளார்.
அவர் தற்பொழுது பாரதிய ஜனதா கட்சியானது, மேற்கு வங்கத்தில் இரட்டை இலக்க எண்ணிக்கையில் கண்டிப்பாக வெற்றி பெறாது. அவ்வாறு அது இரட்டை இலக்க எண்ணிக்கையில், வெற்றி பெற்றால் கண்டிப்பாக நான் என் வேலையினை விட்டுவிடுகின்றேன் எனக் கூறியுள்ளார். இது தற்பொழுது வைரலாகி வருகின்றது.