ராஜ்யசபா செல்லும் பிரசார்ந்த் கிஷோர்! டிஎம்சி ஆதரவால் எம்பி ஆகின்றார்!

01 March 2020 அரசியல்
prashantkishor.jpg

இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளின் முக்கிய விருப்பமாக இருப்பவர் பிரசாந்த் கிஷோர். இவர் அரசியல்வாதியாக மட்டும் இல்லாமல், தேர்தல் வெற்றிகளைத் தீர்மானிப்பவராகவும் உள்ளார்.

இவர் தற்பொழுது தான், பீகார் மாநிலத்தின் ஜனதா தள கட்சியில் இருந்து விலகினார். அந்த கட்சியின் உருப்பினர்கள் பலர், இவருக்கு எதிராக கட்சிக்குள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். இவர், நம் கட்சியில் துணைத் தலைவராக உள்ளார். ஆனால், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திமுக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்காக வேலை செய்கின்றார் எனப் புகார் தெரிவித்தனர்.

இந்த எதிர்ப்பின் காரணமாக, ஜனதா தள கட்சியில் இருந்து விலகினார். இந்நிலையில், அவர் தற்பொழுது ராஜ்யசபாவிற்கு செல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன. மேற்கு வங்க மாநிலத்தின் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில், ராஜ்யசபா உறுப்பினராக பிரசாந்த் கிஷோர் செல்ல உள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குத் தற்பொழுது நான்கு சீட்கள், ராஜ்யசபாவில் உள்ளன. அந்த இடங்களுக்காக மனீஷ் குப்தா, ஜோகன் சௌத்ரீ, அஹமத் ஹசன் இம்ரான் மற்றும் கேடி சிங் ஆகியோர் உள்ளனர். இவர்களில் ஒருவரை நீக்கி விட்டு, அவருக்குப் பதிலாக பிரசாந்த் கிஷோரை இறக்க மம்மதா பேனர்ஜி முடிவு செய்துள்ளார். மேலும், மேற்கு வங்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால், பிரசாந்த் கிஷோரின் உதவியானது பெரிய அளவில் தேவைப்படும் என்பதால், இதனை செய்வதாகவும் கூறப்படுகின்றது.

HOT NEWS