கர்ப்பமாக இருந்த ஜாமியா போராட்ட மாணவி! 3 வாரங்களாக சிறை!

06 May 2020 அரசியல்
safoorazargar.jpg

ஜாமியா பல்கலைக் கழகப் போராட்டத்தின் பொழுது, கைது செய்யப்பட்ட மாணவி, மூன்று வாரங்களாக சிறையில் உள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் 22 மற்றும் 23ம் தேதிகளில், சிஏஏ சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போரட்டத்தில், ஜாப்ராபாத் ரயில் நிலையத்தின் அருகில் போராடிய, 27 வயதான சஃபூரா ஜார்கார் என்றப் பெண், கடந்த ஏப்ரல் 13ம் தேதி அன்று கைது செய்யப்பட்டார்.

அவர் தற்பொழுது மூன்று மாத கர்ப்பிணியாக உள்ளார். இவர், உப்பா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர், தன்னுடைய கணவருடன் சிறைக்குச் சென்ற மூன்று வாரங்களில் இருமுறை மட்டுமே பேசியும் உள்ளார். இவருடைய பெயரில் இன்னும் எப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.

இது குறித்து, பேசியுள்ள அவருடைய குடும்பத்தினர், தற்பொழுது சஃபூரா கர்ப்பமாக இருப்பதாகவும், சட்டத்தின் படி அவளுக்கு நியாயம் கிடைக்கும் எனவும் கூறியிருகின்றனர். இந்தப் பெண்ணிற்காக, தற்பொழுது சமூக வலைதளங்களில் ஆதரவு அதிகரித்துள்ளது. இவரை, விடுதலை செய்யும்படி, பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

HOT NEWS