யானை கொலை! ஒருவர் கைது! கேரள அரசு அதிரடி!

05 June 2020 அரசியல்
elephantcrackers.jpg

கேரளாவில் கர்ப்பிணி யானைக்கு, அண்ணாச்சிப் பழத்தில் வெடி வைத்து கொடுத்துக் கொன்றவர்களில், ஒருவரை கைது செய்துள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.

கேரளாவின் பாலக்காட்டு பகுதியில் உள்ள சைலன்ட் வேளி என்றப் பகுதியில், கர்ப்பிணி யானை ஒன்று சுற்றித் திரிந்துள்ளது. அந்த யானைக்கு, மர்ம நபர்கள் அண்ணாச்சிப் பழத்திற்குள் வெடியினைப் புதைத்து வைத்து, உண்ணக் கொடுத்துள்ளனர். இந்நிலையில், இந்த யானையும் அதனைப் பற்றித் தெரியாமல் வாங்கி வாயில் மென்றுள்ளது.

அவ்வளவு தான். கனப்பொழுதில் அந்த வெடியானது வாயிலேயே வெடித்தது. இதில், அந்த யானையின் வாயும், தாடையும் கிழிந்துவிட்டது. இதனால் அந்த யானையானது, அழுது கொண்டே நீர் குளத்திற்குள் இறங்கி நின்றுள்ளது. அந்த நீரால் தன்னுடைய வாயில் உள்ள காயமானது, வலிக்காமல் இருக்கும் என்று மூன்று நாட்களாக அங்கேயே இருந்துள்ளது.

இந்த சூழ்நிலையில், தொடர்ந்து அந்தக் குளத்திற்குள் யானை நிற்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள், கும்கி யானைகளைக் கொண்டு, அந்த யானையை வெளியில் அழைத்து வர நினைத்தனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்த யானை நின்றபடியே உயிரிழந்துள்ளது. இது உலகளவில் பேசும் விஷயமாக மாறியுள்ளது. உலக செய்திகள் பலவற்றிலும், இந்த விஷயம் இடம்பெற்றுவிட்டது.

போதாத குறைக்கு, மத்திய அரசு கடுமையாக இதனைக் கண்டித்தும் உள்ளது. இந்தியாவில் உள்ளப் பலரும் தங்களுடைய கோபத்தினை, கருத்துக்களாக வெளிப்படுத்தி இருந்தனர். இந்தக் கொடுமையானக் குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என, கேரளா அரசும் அறிவித்தது. இந்நிலையில் இந்தக் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டதாக ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

இது குறித்த விரிவானத் தகவல் தற்பொழுது வரை வெளியாகவில்லை. விசாரணை முடிந்ததும் அவர் பற்றிய செய்தி வெளியாகும் வாய்ப்புகள் உள்ளன.

HOT NEWS