உபியில் சோகம்! 13 மணி நேரப் போராட்டம்! உயிரிழந்த கர்ப்பிணி பெண்!

08 June 2020 அரசியல்
pregnantbelly.jpg

உத்திரப் பிரதேசத்தில் மருத்துவமனையில் இடம் கிடைக்காததால், கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

உத்திரப் பிரதேச மாநிலத்தில் 30 வயதுடனைய எட்டு மாத கர்ப்பிணியான நீலம் என்பவர், தன்னுடைய கணவர் விஜேந்தர் சிங்குடன் நொய்டாவில் வசித்து வருகின்றார். திடீரென நீலத்திற்கு வலி எடுத்துள்ளது. இதனால், நீலத்தினை ஆம்புலன்சில் ஏற்றிக் கொண்டு, விஜேந்தர் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

ஆனால், தொடர்ந்து கொரோனா வைரஸ் காரணமாக நோயாளிகள் அதிகமாக வருவதன் காரணமாக, படுக்கை இல்லை என மருத்துவமனையில் நிராகரித்து உள்ளனர். எட்டுக்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் அனுமதிக் கோரியும் அனுமதி கிடைக்காத காரணத்தால் ஆம்புலன்சிலேயே சுற்றியிருக்கின்றனர். கடைசியாக ஒரு மருத்துவமனையில் இடம் கிடைத்துள்ளது.

தீவிர சிகிச்சைப் பிரிவில், வெண்டிலேட்டரில் வைத்து சிகிச்சையினை ஆரம்பித்து உள்ளனர். ஆனால், அதற்கு முன்பாகவே அந்தப் பெண்ணின் உயிர் பிரிந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம், அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இது குறித்து, நீதிமன்றம் விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளது.

HOT NEWS