7 கிமீ நடைபயணம்! பல் ஆஸ்பத்திரியில் பிரசவம்! குறை பிரசவத்தில் குழந்தை பிறந்தது!

20 April 2020 அரசியல்
pregnant24.jpg

ஊரடங்கு நடப்பில் உள்ள நிலையில், 7 கிமீ நடைபயணமாக, பல் ஆஸ்பத்திரிக்கு சென்று, பெண் ஒருவர் குழந்தைப் பெற்றுள்ள சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூருவில் ஊரடங்கு உத்தரவானது, தீவிரமாக கடைபிடித்து வருகின்றது. இதனால், பொதுமக்கள் வெளியில் வரத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசியப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், ஒரு தம்பதி தெருவில் நடந்து கொண்டே ஏழு கிலோ மீட்டருக்கு நடந்தே, மருத்துவமனையினைத் தேடி உள்ளது.

தொடர்ந்து தேடிக் கொண்டே இருக்கின்ற சமயத்தில், நிறைமாதக் கர்ப்பிணியான அந்தப் பெண்ணிற்கு பிரசவ வலி எடுத்துள்ளது. இதனால், அருகில் இருந்து பல் மருத்துவமனைக்குச் சென்று, அங்கு இருந்த மருத்துவர்களிடம் உதவி கேட்டுள்ளனர். அங்குள்ள பெண் மருத்துவர்கள், அந்தப் பெண்ணிற்கு பிரசவம் பார்த்துள்ளனர்.

அவர்கள் அந்த மருத்துவமனைக்குச் சென்ற பத்தாவது நிமிடத்தில், அந்தத் பெண்ணிற்குக் குறைபிரசவத்தில் குழந்தைப் பிறந்துள்ளது. தற்பொழுது, தாயும், சேயும் நலமாக இருப்பதாக பிரசவம் பார்த்த மருத்துவர் ரம்யா தெரிவித்துள்ளார். தற்பொழுது அந்த தாயும், சேயும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

HOT NEWS