சீனாவின் பித்தலாட்டம்! உண்மையை உடைத்த பிரபல செய்தி நிறுவனம்!

04 June 2020 அரசியல்
xijingping.jpg

கொரோனா வைரஸ் விஷயத்தில், சீன அரசாங்கம் பல உண்மைகளை மறைத்துள்ளதாக, பிரபல செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது.

உலகம் முழுவதும், சீனாவின் ஊஹான் பகுதியில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் பரவ ஆரம்பித்தது. தற்பொழுது வரை நான்கு லட்சம் பேர் பலியாகி உள்ளனர். 65 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில், அமெரிக்க அரசாங்கம் உட்பட பல நாடுகள், இந்த வைரஸ் விஷயத்தில் சீன உண்மையை மறைப்பதாக புகார் தெரிவித்து வருகின்றது. இருப்பினும், தாங்கள் உண்மையாகத் தான் நடந்து கொள்கின்றோம். தேவையற்ற பொய்யினை பரப்ப வேண்டாம் என சீனா கடுமையாக கூறியது. இந்நிலையில், அசோசியேட்டட் பிரஸ் எனப்படும் நிறுவனம் சீனாவின் கொரோனா வைரஸ் நாடகத்தினை தோலுரித்துக் காட்டியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் முழுக்க, சீனாவினை கொரோனா வைரஸ் விஷயத்தில் வெளிப்படையாக நடந்து கொண்டதற்காக உலக சுகாதார மையம் பாராட்டித் தள்ளியது. மேலும், கொரோனா வைரஸ் குறித்த முதன்மைத் தரவுகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு, நன்றியும் தெரிவித்தது. கொரோனா விவகாரத்தில் மிகவும் வெளிப்படையாக நடந்து கொண்டதாக சீனாவினை பெருமையாகப் பேசியது உலக சுகாதார மையம்.

உண்மையில், இப்பொழுது ஏன் தான் பாராட்டினோமோ என்ற கவலையில் உள்ளது உலக சுகாதார மையம். அப்படி ஒரு செய்தி தற்பொழுது வெளியாகி உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கான சோதனைகள், தடுப்பூசி மருந்துகள் தயாரிக்கத் தேவையான வைரஸின் பேட்டர்ன் பற்றியத் தகவல்களை தராமல் இழுத்தடித்துள்ளது.

மேலும், உலக சுகாதார மையத்திற்கு சரியான நேரத்தில், சீன அரசாங்கம் முக்கியத் தரவுகளை வழங்கவில்லையாம். செய்திகளில் வெளியான பிறகு தான், ஒரு சில விஷயங்களை மட்டும் உலக சுகாதார மையத்திற்கு வழங்கி உள்ளது. மற்றவைகளை மறைத்துவிட்டதாம். இது குறித்து, அந்நாட்டு விஞ்ஞானிகளும் அதிருப்தியில் தான் உள்ளனர்.

எவ்வாறு இருப்பினும், சீனாவின் மதிப்பினைக் காப்பாற்றும் பொருட்டு தற்பொழுது தன்னுடைய மதிப்பினை உலக சுகாதார மையம் இழந்துள்ளது என்பது தான் நிதர்சனமான உண்மை.

HOT NEWS