மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அர்ச்சகருக்கு கொரோனா!

25 April 2020 அரசியல்
maduraimeenakshiammantemple.jpg

மதுரையில் உள்ள உலகப் பிரசித்திப்பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் பணிபுரிந்த அர்சகருக்கு, கொரோனா வைரஸ் தொற்று என செய்திகள் வெளியாகின.

மதுரை மேலமாசி வீதியில் வசித்து வந்த 72 வயது பெண்மணி, கொரோனா வைரஸால் மரணமடைந்து உள்ளார். அவர் கடந்த சில நாட்களாக, தீவிர இருதய வலியால் பாதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு முதலில், கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என, சோதனைகள் நடத்தப்பட்டன. முதற்கட்ட சோதனையில் அந்த பெண்ணிற்கு கொரோனா இல்லை என்ற நிலையில், மீண்டும் நேற்று அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில், அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ள நிலையில், அவர் உடனடியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவர் நேற்று இரவு மரணமடைந்தார். இதனைத் தொடர்ந்து, இன்று அதிகாலையில், அவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், அவருடைய இரண்டு மகன்களும் மீனாட்சி அம்மன் கோயிலில் பணியாற்றி வந்தனர்.

இதனால், அவர்கள் உட்பட அந்த மூதாட்டியின் வீட்டில் இருந்த அனைவருக்கும் கொரோனா வைரஸ் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த மூதாட்டியின் வீட்டில் வேலை செய்த பெண்மணிக்கும், அந்த பெண்மணி எங்கெல்லாம் வேலை செய்கின்றாரோ, அவர்களுக்கும் இந்த சோதனை செய்யப்பட்டது. பின்னர், மீனாட்சி அம்மன் கோயில் ஊழியர்கள், காவலர்கள், அர்ச்சகர்கள் என மொத்தம் 180க்கும் அதிகமானோரிடம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில், அர்ச்சகர்கள் வெளிநாட்டில் இருந்து வந்ததாகவும், அதனை வெளியில் கூறாமல் மறைத்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், அந்த இரண்டு அர்ச்சகர்களும், வீட்டினை விட்டு கோயிலுக்கு செல்லவே இல்லை என்றும் கூறப்படுகின்றது. ஆனால், அவ்வாறு எதுவும் நடக்கவில்லை என, கோயில் அர்ச்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

HOT NEWS