விரைவில் தயாராகும் மேட்ரிக்ஸ்4! ப்ரியங்கா சோப்ரா நடிக்க உள்ளார்!

10 July 2020 சினிமா
matrix.jpg

உலகளவில் வெளியாகி, பாக்ஸ் ஆபிசில் பட்டையைக் கிளப்பிய திரைப்படம் மேட்ரிக்ஸ். அதன் வெற்றியினைத் தொடர்ந்து, தற்பொழுது வரை மூன்று பாகங்கள் வெளியாகி உள்ளன. அனைத்தும் சூப்பர்ஹிட் ஆன நிலையில், தற்பொழுது அந்தப் படத்தின் நான்காம் பாகம் உருவாகி வருகின்றது.

இந்தப் படத்திலும், நடிகர் கீனு ரீவிஸ் தான் கதாநாயகனாக நடித்து வருகின்றார். இதனால், இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தப் படம் கொரோனா பரவலுக்கு முன்பிருந்தே எடுக்கப்பட்டு வருகின்றது. இடையில் கொரோனா வைரஸ் பரவியதால், படப்பிடிப்பினை தள்ளி வைத்திருந்தனர்.

இந்நிலையில் தற்பொழுது இப்படத்தின் சூட்டிங்கானது, மீண்டும் தொடங்கி உள்ளது. இந்தப் படத்தில், பாலிவுட் நடிகையும், முன்னாள் உலக அழகியும் ஆன, ப்ரியங்கா சோப்ரா நடிக்க உள்ளார் என்றுத் தகவல்கள் பரவி வருகின்றன. கடந்த 2000ம் ஆண்டு உலகி அழகிப் பட்டம் வென்றவர் ப்ரியங்கா சோப்ரா. அவர் விஜய் நடித்த தமிழ் படமான, தமிழன் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

ஆனால், அவர் தமிழில் இருந்து பாலிவுட்டிற்குச் சென்றுவிட்டார். அங்கு அவருக்கென தனி, ரசிகர் பட்டாளமே உண்டு. தொடர்ந்துப் பலப் படங்களில், பாலிவுட்டில் நடித்து வந்த ப்ரியங்கா சோப்ரா, தற்பொழுது அமெரிக்காவில் வசித்து வருகின்றார். ஹாலிவுட்டின் பிரபலப் பாப் பாடகரான, நிக் ஜோனஸைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், அமேசான் ப்ரைம்முடன் 2 ஆண்டு ஒப்பந்தம் ஒன்றில் அவர் இணைந்துள்ளார்.

அதன்படி, மேட்ரிக்ஸ் 4 பாகத்தில் அவர் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் இது குறித்துப் பேசுகையில், அமேசானுடன் இணைந்துள்ளதால், ஆங்கிலம், இந்தி என சர்வதேச தரத்தில் தம்மால் நடிக்க இயலும் எனவும், மேலும், உலகளவில் புகழ்பெற்ற தரமான கலைஞர்களுடன் நடிக்கத் தயார் என்று அவர் கூறியுள்ளார்.

HOT NEWS