பிரியங்கா காந்தியின் கார் தடுத்து நிறுத்தம்! நடந்தே சென்ற பிரியங்கா! உபியில் பரபரப்பு!

30 December 2019 அரசியல்
priyankagandhiwalk.jpg

உத்திரப்பிரதேச மாநிலத்தில், திருத்தப்பட்ட தேசியக் குடியுரிமை மசோதாவிற்கு எதிராக, பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் 76 வயதுடைய எஸ்.ஆர். தாராபுரி என்ற ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியும் கலந்து கொண்டார்.

இதனால், அவரை அம்மாநிலப் போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து, அவருடையக் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக, பிரியங்கா காந்தி சென்றார். ஆனால், அவருடைய வாகனத்தினைத் தடுத்தி நிறுத்திய போலீஸ், அவரை மேற்கொண்டு காரில் செல்ல அனுமதிக்கவில்லை. என்னவென்று பிரியங்கா தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கு, உரிய அனுமதியில்லாமல், இவ்வளவுப் பாதுகாப்புடன் அவர் வந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, காரில் இருந்து இறங்கிய ப்ரியங்கா காந்தி, சாலையில் நடக்க ஆரம்பித்து விட்டார். பின்னர், சில தூரம் சென்றதும் அவருடையப் பாதுகாவலர்கள் அவரை சமரசம் செய்ய முயற்சி செய்தனர். இருப்பினும், அவர் கேட்பதாக இல்லை. அவர் வந்துள்ளதை அறிந்த காங்கிரஸார் அவரை சூழ்ந்து கொண்ட்னர். பின்னர், அப்பகுதியில் வந்த டூவிலரில் ஏறிக் கொண்டு, தாராபுரியின் வீட்டிற்கு சென்றார். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

HOT NEWS