கிருமி நாசினி குளியல்! பிரியங்கா கடும் தாக்கு!

31 March 2020 அரசியல்
chemicalbath.jpg

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், வெளிமாநிலங்களுக்கு வேலைக்குச் சென்றவர்கள் தங்களுடைய சொந்த ஊருக்குத் திரும்ப முடியமால் தவித்து வருகின்றனர். இந்நிலையில், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில், தங்களுடைய சொந்த ஊருக்குச் செல்ல விரும்பும் மக்களுக்காக பொதுப் போக்குவரத்து ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில், பேருந்திற்காக தற்பொழுது வரை பொதுமக்கள் காத்துக் கொண்டு தான் இருக்கின்றனர். உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவிற்கு வந்த ஏராளமான தொழிலாளர்கள், பரேலி என்ற இடத்தில் தங்க வைக்கப்பட்டனர். அவர்கள் மூலம், கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க அவர்கள் மீது, கிருமி நாசினியானது பீய்ச்சி அடிக்கப்பட்டது.

இதனால் பலரும் பாதிக்கப்பட்டு உள்ளதாக, புகார்கள் எழுந்துள்ளன. இந்தக் கூட்டத்தில், குழந்தைகளும் இருந்ததால், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையமும் தலையிட்டுள்ளது. இது குறித்து, மூன்று நாட்களில் உரிய விளக்கம் அளிக்கவும் மாநில அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது. இந்த செயலுக்கு பலரும் தங்களுடையக் கண்டனத்தினைப் பதிவு செய்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சி, உத்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் போன்றவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

HOT NEWS