பொதுவாக நாம் வகுப்பறையில் நம்முடைய நண்பன் வரவில்லை என்றால், அவனுக்குப் பதிலாக நாம் பொய் அட்டடன்ஸ் கொடுப்போம். இதனை ஆசிரியரும் நம்பிவிடுவார். அதுபோலவே, நம் அரசாங்கத்தால் தடைச் செய்யப்பட்ட வலைத்தளங்களைப் பயன்படுத்த பொய்யானத் தகவலை அளித்து நமக்கு உதவுவது, ப்பிராக்ஸி சர்வர் எனப்படும்.
நாம் இணையதளத்தைப் பயன்படுத்தும் போது ஒரு சில வெப்சைட்டுகளை நம் அரசங்கம் தடைச் செய்திருக்கும். அந்தத் தடையை உடைத்து நாம் வேண்டியவற்றை ஆன்லைனில் செய்யவே இந்தவகை ப்பிராக்ஸி சர்வர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
உதாரணமாக வடகொரியவில் ஃபேஸ்புக் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு மக்களால் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்த இயலாது. ஆனால் ப்பிராக்ஸி சர்வர்களைப் பயன்படுத்துவதன் மூலம் ஃபேஸ்புக்கை எளிதாகவும், எந்தவொரு தடையுமின்றியும் பயன்படுத்த இயலும்.
இந்த வகைச் சேவைகளை உலகெங்கிலும் பல நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இலவசமாகவும், கட்டண அடிப்படையிலும் தன் வாடுக்கையாளர்களுக்கு வழங்குகிறது. பெரும்பாலான இணையதளக் குற்றங்கள் செய்ய இந்த வகைப் ப்பிராக்ஸி சர்வர்கள் உதவி புரிகின்றன. மேலுன் வி.பி.என். பயன்படுத்திச் சுதந்திரமாக ஹேக்கர்கள் இணையதளக் குற்றங்களில் எந்தவொரு அச்சமுமின்றிச் செய்கின்றனர். இவ்வாறு செய்வதால் அரசாங்கத்தால் பயன்படுத்துவோரைக் கண்டறிய முடிவதில்லை.
கீழே உள்ள ஒரு சில நல்ல தரமான நிறுவனங்கள் சிறந்த ப்பிராக்ஸி சர்வர்கள் சேவையை அளிக்கின்றன.