மனித தலையினை சுட்டு சாப்பிட்ட சைக்கோ கைது! இளம்பெண் உடந்தை!

17 August 2020 அரசியல்
andhrapsycho.jpg

ஆந்திராவில் மனித தலையினை, இளம்பெண்ணுடன் சுட்டுத் தின்ற சைக்கோவினை போலீசார் கைது செய்து உள்ளனர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது ரெல்லி வீதி. இங்கு கொரோனா ஊரடங்கு காரணமாக, பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகின்றது. இதனிடையே, அப்பகுதியில் சுப்பிரமணியம் என்பவர் அப்பகுதியில் தங்கியிருக்கின்ற ராஜூ கண்டார். ராஜூ அவர் வீட்டின் முன்பிருந்த ஒரு கோணிப்பையினை பிரித்துப் பார்த்துவிட்டு, அதனுள் மனித தலை இருப்பதை கண்டுள்ளார்.

பின்னர், அந்தக் கோணிப் பையினை எடுத்துக் கொண்டு, ராஜூ சென்றுள்ளார். ராஜூவினை என்ன செய்யப் போகின்றார் என சுப்பிரமணியம் கவனித்துள்ளார். அப்பொழுது ராஜூ, அவருடைய பாழடைந்த வீட்டிற்குள் சென்று தீ மூட்டி, அதில் அந்தப் பையில் இருந்த மனித தலையினை வாட்டி திண்றுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சுப்பிரமணியம், போலீசிற்குப் புகார் அளித்தார்.

அதனடிப்படையில் அப்பகுதிக்கு விரைந்து வந்த போலீசார், ராஜூவினைப் பிடித்துச் சென்றனர். சுப்பிரமணியம் பார்க்கும் பொழுது அருகில் ஒரு பெண்ணும் அந்தத் தலையினை திணறுள்ளார். அவர் யார் எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, ராஜூவின் தந்தை உடல்நலக் குறைவால் காலமானதாகவும், அதனைத் தொடர்ந்து அவருடைய தாய் தனி வீட்டிற்குச் சென்று விட்டதாகவும் கூறப்படுகின்றது.

இவர் பல தீயப் பழக்கங்களுக்கு அடிமையாகி, இவ்வாறு ஒரு சைக்கோவாக மாறியிருக்கின்றார் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்து உள்ளனர். இச்சம்பவம், தற்பொழுது இந்திய அளவில் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

HOT NEWS