10, 11, 12 பொதுத்தேர்வு ஹால் டிக்கெட்டுகள் டவுன்லோட் செய்யலாம்!

04 June 2020 அரசியல்
publicexam.jpg

தற்பொழுது தள்ளி வைக்கப்பட்டு உள்ள 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான ஹால்டிக்கெட்டுகளை இணையத்தில் டவுன்செய்யும் வசதியினை தமிழக பள்ளிக் கல்வித்துறை உருவாக்கி உள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி முதல், ஊரடங்கு உத்தரவானது அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. பள்ளிகளில் நடத்தப்படும் பொதுத்தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டு உள்ளன. ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதனால், பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், தள்ளி வைக்கப்பட்டுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வானது, வருகின்ற ஜூன் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அதில், பொதுத் தேர்வினைத் தள்ளி வைக்க வேண்டும் எனக் கூறப்பட்டு உள்ளது.

இந்த சூழ்நிலையில், கண்டிப்பாக இந்தப் பொதுத்தேர்வு நடத்தப்படும் என அமைச்சர் கூறியுள்ளார். இன்று முதல் (04-06-2020) பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை ww.dge.tn.gov.in/ என்ற வலைதளத்தில் தரவிறக்கம் செய்யும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

HOT NEWS