பொதுத்துறை வங்கிகள் இணைப்பு! நிதியமைச்சர் அதிரடி அறிவிப்பு!

31 August 2019 அரசியல்
nirmalasitharaman.jpg

இந்தியாவில் உள்ள பத்துப் பொதுத்துறை வங்கிகளை இணைப்பதாக, இந்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். நேற்று இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான்கு பெரிய வங்கிகளுடன், ஆறு சிறிய வங்கிகளை இணைப்பதாக அறிவித்தார்.

இந்த அறிவிப்பின் காரணமாக பத்து பொதுத் துறை வங்கிகள் நான்குப் பொதுத்துறை வங்கிகள் ஆகின்றன. ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா ஆகிய இரண்டு வங்கிகளும், பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைக்கப்பட உள்ளன. அதே போல், ஆந்திரா வங்கியும், கார்ப்பரேஷன் வங்கியும் யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுடன் இணைக்கப்பட உள்ளன.

சிண்டிகேட் வங்கியை, கனரா வங்கியுடன் இணைக்கின்றனர். இதன் காரணமாக, இந்த வங்கியானது நாட்டின் நான்காவதுப் பெரிய வங்கியாக மாற்றம் அடையும். அலகாபாத் வங்கி, இந்தியன் வங்கியுடன் இணைக்கப்படுகின்றன. தொடர்ந்து வங்கிகள் இணைப்பை அடுத்து, இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 12 ஆக குறைந்துள்ளது.

தற்பொழுது வங்கிகள் இணைப்புக்குப் பின், பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி, இந்தியன் வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் இந்தியா, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூகோ வங்கி, பேங்க் ஆப் மஹாராஷ்ட்ரா, பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி ஆகியவையே பொதுத்துறை வங்கிகளாக செயல்பட உள்ளன.

HOT NEWS