ஈபிஎஸ் ஓபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் புகழேந்தி!

07 January 2020 அரசியல்
pugazhendhiaiadmk.jpg

அதிமுகவினை எதிர்த்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியினை, டிடிவி தினகரன் ஆரம்பித்து இருந்தார். அதில் இணைவதற்காக, அதிமுகவில் இருந்து வெளியேறிய அதிருப்தி எம்எல்ஏக்கள், அமமுகவில் இணைந்தனர்.

தொடர்ந்து, கொஞ்சம் கொஞ்சமாக டிடிவி தினகரனின் கட்சியில் இருந்து ஒவ்வொரு தலைவராக விலகி வந்த நிலையில், அமமுக கட்சியின் முக்கியத் தலைவரான தங்கத் தமிழ்செல்வன் திமுகவில் இணைந்தார். இந்நிலையில், டிடிவி தினகரனுக்கும், அக்கட்சியின் முக்கியத் தலைவரான புகழேந்திக்கும் இடையில், கடும் மோதல் ஆரம்பித்தது.

இந்நிலையில், கொஞ்ச நாட்களாக, அமமுக கட்சியின் செயல்களில் ஈடுபடாமல் இருந்து வந்தார் புகழேந்தி. இதனிடையே, நேற்று தமிழக முதல்வரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக துணை முதல்வரும், அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் முன்னிலையில் இணைந்தார்.

HOT NEWS