புல்வாமாவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில், 200 கிலோ வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டன என, தேசியப் புலனாய்வு முகமை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டு உள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14ம் தேதி அன்று, ஜெய்ஷ் ஈ முகம்மது தீவிரவாத அமைப்பினைச் சேர்ந்தவர்கள், காஷ்மீரின் புல்வாமா பகுதியில் உள்ள சோதனையைச் சாவடியினை அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த இராணுவ முகாமிற்குள் காருடன் நுழைந்தனர். அவ்வாறு நுழைந்த காரில் இருந்த வெடிகுண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டன. இந்த திடீர் சம்பவத்தால், அங்கிருந்து இராணுவ வீரர்கள் சுதாரிப்பதற்குள் பலமாக பாதிக்கப்பட்டனர்.
இந்த வெடிகுண்டு விபத்தில், சுமார் 40 இராணுவ வீரர்கள் பலியாகினர். இது உலகளவில் விவாதப் பொருளாக மாறியது. அதனைத் தொடர்ந்து, இந்தியாவின் என்ஐஏ இது குறித்து விசாரிக்க ஆரம்பித்தது. தற்பொழுது, தன்னுடைய விசாரணை அறிக்கையினை, நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளது. சுமார், 13,800 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில், இந்த தீவிரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய, தீவிரவாதிகளின் பெயர்களும் குறிப்பிடப்பட்டு உள்ளன.
இந்தத் தாக்குதலில், ஜெய்ஷ் ஈ முகம்மது அமைப்பின் தலைவர், மசூத் ஆஸார், அவருடைய சகோதரர் முஃப்தி அப்துல் ரௌஃப் அஸ்கர், உள்ளிட்டப் பலர் செயல்பட்டு உள்ளனர். அத்துடன், இந்தியாவில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளையும் அவர்கள் பயன்படுத்தி இருப்பதாக, என்ஐஏ அவர்களுடையப் பெயர்களையும் குறிப்பிட்டு உள்ளது.