பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் ஆவேசம்! பதிலடி கொடுக்க வேண்டும்!

19 June 2020 அரசியல்
punjabcm.jpg

பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங், தற்பொழுது தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், சீன இராணுவத்தினை வைத்து செய்துவிட்டார் என்று தான் கூற வேண்டும்.

இந்திய இராணுவத்திற்கும், சீன இராணுவத்திற்கும் இடையில் கடந்த ஜூன் 15ம் தேதி இரவு நடைபெற்ற மோதலில், 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், சீனாவிற்கு இந்திய நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்து வருகின்றது. இந்த சீனாவின் தாக்குதல் குறித்து பஞ்சாப் மாநிலத்தின் முதல்வரும் முன்னாள் இராணுவ அதிகாரியுமான கேப்டன் அம்ரீந்தர் சிங், செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்தார்.

அவர் பேசுகையில், எல்லையில் பிரச்சனைக்குரிய இடத்தில் இருக்கும் வீரர்களுக்கு, ஏன் உரிய ஆயுதங்களை வழங்கவில்லை. அவர்கள் வெறும் கையால் எதிரியுடன் மோத வேண்டிய வந்ததற்கு ஆயுதங்கள் வழங்காததே காரணம் என்றுக் கூறியுள்ளார். மேலும், நான் ஒரு அரசியல்வாதியாகப் பேசவில்லை எனவும், ஒரு முன்னாள் இராணுவ வீரன் என்ற முறையில் பேசுவதாகவும் கூறியுள்ளார்.

இந்திய வீரர் ஒருவரின் தலை தரையில் வீழ்ந்தாலும், எதிரி நாட்டின் மூன்று வீரர்களின் தலையானது தரையில் சரிய வேண்டும் என்று ஆவேசமாகக் கூறியுள்ளார். சீனாவின் தாக்குதல் குறித்து, இந்திய அரசாங்கம் மக்களுக்காக உரிய பதிலை தர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

HOT NEWS