பஞ்சாப் மாநில முதல்வர், அனைத்து முதல்வர்களுக்கும் மானியம் கேளுங்கள் என கடிதம்!

24 April 2020 அரசியல்
amarindersingh.jpg

பாரதப் பிரதமரிடம், மூன்று மாதத்திற்கான கொரோனா வைரஸ் மானியம் கேளுங்கள் என, பஞ்சாப் மாநில முதல்வர் அமரேந்திர் சிங், இந்தியாவின் அனைத்து முதல்வர்களுக்கும் கடிதம் எழுப்பியுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. இதனால், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவானது, வருகின்றே மே-3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மட்டுமின்றி, மாநிலங்களின் வருவாயும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.

இதனையடுத்து, பிரதமர் நிதியுதவி வழங்க வேண்டும் என, தமிழக முதல்வர் உட்பட பலரும் கோரிக்கை வைத்தனர். ஆனால், அனைவருடைய கோரிக்கைகளையும் ஏற்ற மோடி அரசு, அவர்கள் கேட்டதை விட மிக சொற்ப அளவிலான பண உதவியினை வழங்கியுள்ளது. இந்நிலையில், நேற்று இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதல்வர்களுக்கும், தன்னுடைய கடிதத்தினை பஞ்சாப் மாநில முதல்வர் கேப்டன் அமரேந்திர் சிங் அனுப்பி வைத்துள்ளார்.

அதில், மூன்று விஷயங்களை முன்னிலைப்படுத்தி உள்ளார். மாநிலங்களின் வருவாய் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளதால், மாநிலங்களுக்கு மத்திய அரசு, தாராளமாக நிதியுதவி வழங்க வேண்டும். நிதி ஆணையத்தின் முழு அறிக்கையையும், அடுத்த ஆண்டு வரை ஒத்தி வைக்க வேண்டும்.

ஏப்ரல் 1, 2021 முதல், ஐந்தாண்டு திட்டத்தினை செயல்படுத்திக் கொள்ளலாம். கொரோனா வைரஸ் பாதிப்பினை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். நடப்பு நிதியாண்டில், நிதி ஆணையம் வழங்கும் நிதியின் அளவினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அவர் அதில் குறிப்பிட்டு உள்ளார்.

HOT NEWS