விவசாய மசோதாக்கள் நிராகரிப்பு! பஞ்சாப் சட்டசபை ஒரு மனதாக முடிவு!

20 October 2020 அரசியல்
captainamarindersingh.jpg

பஞ்சாபில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய மசோத்தாக்களை ஏற்கக் கூடாது என, ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டு உள்ளது.

பஞ்சாப் மாநிலம் சண்டிகார் நகரில் அமைந்துள்ள விதான் சப்ஹாவில், இன்று அவசரமாக பஞ்சாப் மாநில சட்டசபை உறுப்பினர்கள் பங்கேற்றனர். அதில் பேசிய முதலமைச்சர் கேப்டன் அமரிந்தர் சிங், மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டங்களுக்கு எதிராக Farmers Produce Facilitation Act, Amendment to the Essential Commodities Act, Amendment to the Farmers Agreement and Farm Services Act என்ற புதிய திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.

இதனால் மத்திய அரசுக் கொண்டு வந்துள்ள விவசாய சட்டங்களை, அங்கு அமல்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டு உள்ளது. இது குறித்துப் பேசிய அம்மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங், இந்த மசோதாக்களுக்காக சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தினை கூட்டுவதாகவும் தெரிவித்து உள்ளார்.

HOT NEWS