பப்பி திரைவிமர்சனம்!

15 October 2019 சினிமா
puppy.jpg

பதின்ம வயதுகளில், ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையே நடக்கும் உடல் சார்ந்தப் பிரச்சனைகள் மற்றும் ஆசைகள் ஆகியவைகளைக் கூறும் படமாக உள்ளது இந்த பப்பி.

படத்தின் நாயகன் வருண், பல படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்தவர். இந்தப் படத்தில் நாயகனாக அறிமுகமாகி உள்ளார். காமெடி நடிகனாக யோகி பாபு. படம் முழுக்க, கல்லூரி மாணவனின் உடல் ஆசை மற்றும் பெண் ஆசை இதை வைத்தே எடுத்துள்ளனர். சம்யுக்தா இப்படத்தின் நாயகியாக, நடித்துள்ளதுள்ளார். மதுரைக்காரப் பெண், மதுரையில் இருந்து சென்னையில் குடும்பத்துடன் குடியேறுகிறார்.

ஹீரோவுடன் நெருங்கிப் பழக ஆரம்பிக்கிறார். கடைசியில், அவர்களுடையப் பழக்கம் கட்டில் வரை செல்கிறது. கர்பமும் உண்டாகின்றது. அதன் பின், என்ன நடந்தது என்பது தான் படத்தின் மீதிக் கதை.

உடனிருக்கும் பப்பி நாயின் குட்டியை வைத்து, நமக்குத் தாய்மை என்றால் என்ன என்பது பற்றி பாடம் எடுத்திருக்கிறார் இயக்குநர். அப்பா சாமி இதெல்லாம் கொஞ்சம் ஓவர்டான்னு சொல்ற அளவிற்குத் தான் படத்தின் கருத்து உள்ளது. படத்தினை லாஜிக்குகள், கவர்ச்சிகளைக் கண்டு கொள்ளாமல் பார்த்தால் ரசிக்கலாம்.

மொத்தத்தில் பப்பி திரைப்படம், ஷேம் ஷேம் பப்பி ஷேம்.

ரேட்டிங் 2/5

HOT NEWS