1976 ஆம் ஆண்டு, செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்த நாசா நிறுவனத்திற்கு ஒரு மிகப் பெரிய குழப்பம் ஏற்பட்டது. செவ்வாயில் படம் எடுத்த செயற்கோள், ஒரு புகைப்படத்தை அனுப்பியது. அதில் ஒரு பிரமிட் மற்றும் அதில் ஒரு முகம் இருந்தது. இது ஏதோ, தவறாக புகைப்படம் மாறிவிட்டது என விஞ்ஞானிகள் நினைத்தனர்.
இதனால், அதைப் பற்றி பெரிய அளவில் ஆராய்ச்சி செய்யவில்லை. வைக்கிங் ஒன்று மற்றும் வைக்கிங் 2 ஆகிய விண்கலங்கள் எடுத்து அனுப்பிய, இத்தகைய புகைப்படங்களை நம்பவில்லை என்றாலும், அதனை ஆராய்ச்சி செய்ய ஒரு விஞ்ஞானிகள் விரும்பினர். எனவே, அதற்கு அனுமதியும் வழங்கப்பட்டது. இந்நிலையில், தற்பொழுது மிக சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
அப்புகைப்படத்தில் உள்ள முகமும், அந்த முகம் உள்ள பிரமிடும் உண்மையானது என்பது தான் அந்த சுவாரஸ்சியமான தகவல் ஆகும். ஆம், மூன்று நாசா விஞ்ஞானிகள், இந்தப் புகைப்படத்தை ஆராய்ச்சி செய்து வந்துள்ளனர்.
1976ல் இருந்த புகைப்படக் கருவிகளால், துல்லியமாக புகைப்படம் எடுக்க முடியாது. மேலும், கிடைத்தப் புகைப்படமும் மிகத் தெளிவாக இல்லை. ஆனால், தற்பொழுதுள்ள விஞ்ஞான வளர்ச்சியால், இப்புகைப்படத்தை ஆராய்ச்சி செய்து அதன் உண்மையை கண்டுபிடித்துள்ளனர்.
அந்த விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, அந்த பிரமிடும், அதில் உள்ள முகம் போன்ற அமைப்பும் எதையோ, குறிப்பது போல் உள்ளது. ஆனால், அதைப்பற்றிய விரிவான விளக்கம் நம்மிடம் இல்லை. இதனைப் பற்றிய ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விரைவில், இது பற்றிய உண்மைகள் உலகிற்கு தெரிய வரும் எனவும் கூறுகின்றனர்.
1976ல் கிடைத்த புகைப்படத்திற்கே, இப்பொழுது தான் விவரம் கிடைத்துள்ளது என்றால், தற்பொழுது கிடைக்கும் புகைப்படத்திற்கு எப்பொழுது விவரம் கிடைக்கும்? நீங்களே சொல்லுங்களேன்!