சூப்பர் கம்ப்யூட்டரை தூக்கி சாப்பிட்ட கூகுள் கம்ப்யூட்டர்! என்ன வேகம்னு தெரியுமா?

24 October 2019 தொழில்நுட்பம்
quantumsupermacy.jpg

சூப்பர் கம்ப்யூட்டரைப் பற்றி, நமக்கு ஒரளவுக்குத் தெரியும். பெரிய அளவிலான வேலைகளைக் கூட, மிக எளிதாகவும், விரைவாகவும் முடிக்கும் சக்திப் பெற்றவை தான் இவை. இவை அனைத்துமே, பிரத்யேக பிராசஸர் உட்பட அனைத்துமே, சிறப்பான மற்றும் சக்தி வாய்ந்த பொருட்களால் உருவாக்கப்படுகின்றது.

அப்படிப்பட்ட சூப்பர் கம்ப்யூட்டர்களை விட, தற்பொழுது, கூகுள் உருவாக்கியுள்ள குவாண்டம் சூப்பர்மெஸி எனும் கம்ப்யூட்டர் சிப் 200 வினாடிகளில் செய்து முடித்துள்ள ஒரு வேலையை, தற்பொழுதுள்ள கம்ப்யூட்டர்கள் செய்ய சுமார் 10,000 ஆண்டுகள் ஆகும் எனக் கணித்துள்ளது.

சிஹாமோர் எனப்படும், 54 க்யூபிட் பிராஸரால் இந்த குவாண்டம் சூப்பர்மெஸி உருவாக்கப்பட்டுள்ளது. இது மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரத்யேகமானப் பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது. சீனாவில் தான் தற்பொழுது, உலகின் மிக அதிவேகமான சூப்பர் கம்ப்யூட்டர் உள்ளது.

அவைகளை விட, கூகுள் உருவாக்கியுள்ள குவாண்டம் சூப்பர்மெஸி எனும் தொழில்நுட்பம், 10,000 மடங்கு அதி சக்தி வாய்ந்தது என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ப்ராஜெக்ட்டிற்காக, தனியாகப் பல கோடிகளை ஒதுக்கியிருந்தாராம், கூகுள் நிறுவனத்தின் முதன்மை செயலரான சுந்தர் பிச்சை.

ai.googleblog.com/2019/10/quantum-supremacy-using-programmable.html

HOT NEWS