காலாண்டு விடுமுறை வதந்தி குறித்து கல்வித்துறை விளக்கம்!

17 September 2019 அரசியல்
books.jpg

காலாண்டு விடுமுறை இந்த ஆண்டு கிடையாது என, தகவல் பரவியதை அடுத்து அது குறித்து விளக்கம் அளித்தது கல்வித்துறை இயக்குநரகம்.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், தற்பொழுது காலாண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்வில் பல லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதி வருகின்றனர். ஒவ்வொரு காலாண்டு தேர்வு முடிந்ததும், விடுமுறை விடுவது வழக்கம்.

இந்த முறை காலாண்டு பரிட்சை முடிந்தும், காந்தி ஜெயந்தி வருகிறது. இதற்காக, அன்று காந்தி குறித்து வகுப்புகள் நடைபெறும் என, சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. இந்நிலையில், அது குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், ஏற்கனவே அறிவித்த விடுமுறையில், எவ்வித மாற்றமும் இல்லை. காந்தி ஜெயந்தியைக் கொண்டாடும் பள்ளிகள், கொண்டாடிக் கொள்ளலாம். அதே போல், விருப்பம் உள்ள மாணவர்கள் அதில் கலந்து கொள்ளலாம் எனவும், காலாண்டு விடுமுறையில் மாற்றமில்லை எனவும், பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

HOT NEWS