சென்னைக்கு கோவிட்19 சிறப்பு அதிகாரியாக இராதாகிருஷ்ணன் நியமனம்!

02 May 2020 அரசியல்
radhakrishnan.jpg

சென்னையில் தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவுவது, அதிகரித்து வருகின்றது. இதற்காக இராதா கிருஷ்ணன் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

சென்னையில் தற்பொழுது கொரோனா வைரஸானது, தன்னுடைய கோர முகத்தினைக் காட்டி வருகின்றது. தற்பொழுது வரை, 1082 பேர் கொரோனா தொற்று உள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டு உள்ளனர். கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடைய 63 பேருக்கு, கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அதே போல், ராயப்பேட்டை, வடசென்னை உள்ளிட்டப் பகுதிகள் அதிகமாகப் பாதிக்கப்பட்டு உள்ளன.

நேற்று மட்டும், 3200 பேரிடம் கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து, வைரஸ் தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில், அதனைக் கட்டுப்படுத்த புதிய குழு ஒன்றினை, தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின், வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணனை, கொரோனா வைரஸைப் பரவுவதைத் தடுக்கும் சிறப்பு அதிகாரியாக நியமித்துள்ளது.

அவருடன் ஐந்து ஐபிஎஸ் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு உள்ளனர். டிஐஜி புவனேஸ்வரி சென்னை புறநகர் பகுதியில் பணிபுரிய கூடுதலாக நியமிக்கப்பட்டு உள்ளார். அதுமட்டுமின்றி, ஐந்து ஐபிஎஸ் அதிகாரிகளின் பெர்களையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மகேஷ்குமார் அகர்வால், ஆபாஷ்குமார், அமரேஷ் புஜாரி, அபய்குமார் சிங் மற்றும் பவானீஸ்வரி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

HOT NEWS