ராதாபுரம் வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிடத் தடை!

05 October 2019 அரசியல்
votingmachine.jpg

ராதாபுரத்தில் நடத்தப்பட்ட மறு வாக்கு எண்ணிக்கையின் முடிவை வரும் அக்டோபர் 23ம் தேதி வரை வெளியிட, நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

வெறும் 49 வாக்குகள் வித்தியாசத்தில், அதிமுக வேட்பாளர் திரு. இன்பதுரை வெற்றிப் பெற்றார். இதனை முன்னிட்டு, திமுக வேட்பாளர் திரு. அப்பாவு வழக்குத் தொடர்ந்தார். அதில், தபால் வாக்குகளில், 203 வாக்குகள் எண்ணப்படவில்லை எனவும், மேலும், 19, 20 மற்றும் 21 சுற்று வாக்கு எண்ணிக்கையில், முறைகேடு நடைபெற்றதாகவும் வழக்குத் தொடர்ந்தார்.

இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி, மறு வாக்கு எணிக்கைக்கு உத்தரவிட்டார். இதனால், நேற்று காலை 11.15 மணி முதல் மாலை 6.30 மணி வரை, மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அப்பொழுது, அதிமுக வேட்பாளர் இன்பதுரை, தேர்தல் அதிகாரிகள், பொறியாளர்கள் மற்றும் துப்பாக்கி ஏந்தியக் காவலர்கள் ஆகியோர், வாக்கு எண்ணும் மையத்தில் இருந்தனர்.

மற்றவர்கள் அனைவருமே, வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே இருந்தனர். வரும் அக்டோபர் 23ம் தேதி, இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ள நிலையில், அன்று எப்பொழுது மறு வாக்கு எண்ணிக்கையின் முடிவு வெளியாகும் என தெரிவிக்கப்படலாம் என, எதிர்ப்பார்க்கப்படுகிறது.

HOT NEWS