தெலுங்கர்களை வந்தேறி என்று அழைப்பர்கள், பின்னர் எதற்காக வங்கதேசத்தினைச் சேர்ந்தவர்களுக்காக போராட வேண்டும். அவர்களை எதற்கு இவர்கள் ஆதரிக்க வேண்டும் என, நடிகர் ராதாரவி பேசியுள்ளார்.
குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக, நாடு முழுவதும் பாஜக பேரணி நடத்தி வருகின்றது. சென்னையில் நடைபெற்ற பேரணி முடிந்த பின், மேடையில் ராதாரவி பேசினார். அப்பொழுது அவர் கூறுகையில், தமிழகத்தில் தெலுங்கர்களை வந்தேறிகள் என்றுக் கூறுபவர்கள் எதற்காக, வங்கதேசத்தில் இருந்து வந்துள்ளவர்களை ஆதரிக்க வேண்டும். அவர்களுக்கு எதிராக எதற்காக குரல் கொடுக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர் பேசுகையில், இந்தியாவில் இருக்கும் எந்த ஒரு இஸ்லாமியருக்கும், இந்த குடியுரிமைச் சட்டத்தால் பாதிப்பு ஏற்படாது. ஒருவேளைப் பாதிப்பு ஏற்பட்டால், நானே இஸ்லாமியராக மாறிவிடுவேன் என்றுக் கூறியுள்ளார். இலங்கைத் தமிழர்களுக்காக போராடுவது போல், ஒரு சிலர் பணத்திற்காக நடிக்கின்றனர் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.