விரைவில் இந்தியா வரும் ரபேல் விமானம்! ஜூலை 27 இந்தியா வருகின்றது!

30 June 2020 அரசியல்
fighterjet.jpg

வருகின்ற ஜூலை 27ம் தேதி அன்று, இந்தியாவிற்கு வழங்கவிருந்து ரபேல் விமானங்களின் முதல் பங்கினை, பிரான்ஸ் வழங்க உள்ளது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும், இடையில் லடாக் மற்றும் லே பகுதியில் எல்லைப் பிரச்சனைத் தீவிரமடைந்து உள்ளது. இதனால், சீனா தன்னுடைய இராணுவத்தினை அப்பகுதியில் குவித்த வண்ணம் உள்ளது. அதனை எதிர்க்கும் வகையில், இந்தியாவும் பல வீரர்களை அப்பகுதிக்கு அனுப்பி உள்ளது. இந்த சூழ்நிலையில், பிரான்ஸிடம் 59,000 கோடி மதிப்பில் 36 ரபேல் விமானங்களை வாங்க இந்தியா முடிவு செய்தது.

இதற்காக, பிரான்ஸ் நாட்டில் உள்ள டஸ்ஸோ நிறுவனத்துடன் ஒப்பந்தமும் செய்யப்பட்டது. தற்பொழுது இந்தியாவிற்கு அச்சுறுத்தல் உள்ள காரணத்தால், அவசரமாக விமானங்கள் தேவைப்படுகின்றது என இந்தியா பிரான்ஸ் அரசாங்கத்திடமும், டஸ்ஸோ நிறுவனத்திடமும் கோரிக்கை வைத்தது. இதனை பரிசீலித்த பிரான்ஸ் அரசும், டஸ்ஸோவினை துரிதகதியில் விமானங்களைத் தயாரிக்க உத்தரவிட்டது.

இதனை முன்னிட்டு, இந்தியாவிற்காக தன்னுடைய முதல் டெலிவரி குறித்து டஸ்ஸோ தகவல் அளித்துள்ளது. அதன்படி, வருகின்ற ஜூலை 27ம் தேதி அன்று, இந்தியாவிற்கு ஆறு ரபேல் விமானங்கள் வந்து சேரும் என்றுக் கூறியுள்ளது. அதற்கு முன், இடையில் அரபு விமானப் படைதளத்தில் அது நிலைநிறுத்தப்படும் என்றுக் கூறப்பட்டு உள்ளது.

இந்த விமானங்கள் ஹரியாவின் படைப் பிரிவிலும், அதே சமயம் மேற்குவங்கப் படைப்பிரிவிலும் நிறுத்தப்பட உள்ளன. இந்த விமானம் மிகவும் விஷேசமானது. இந்த போர் விமானத்தினை, கப்பலிலும், தரையிலும் நிறுத்த இயலும். 9 டன் எடையுள்ள ஆயுதங்களை எடுத்துச் சென்று, தாக்குதல் நடத்தும் சக்தி படைத்தது. லடாக், காஷ்மீர் போன்றப் பகுதிகளிலும், இந்த விமானத்தினை நிறுத்த இயலும்.

HOT NEWS