இந்தியாவினை நோக்கி கிளம்பியது ரபேல்! ஜூலை 29 தேதி இந்தியாவிற்குள் பறக்கும்!

27 July 2020 அரசியல்
rafalejetcoming.jpg

பிரான்ஸ் நாட்டில் உருவாக்கப்பட்டு உள்ள ரபேல் போர் விமானமானது, தற்பொழுது இந்தியாவினை நோக்கித் தன்னுடையப் பயணத்தினை தொடங்கி உள்ளது.

பிரான்ஸ் நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள ரபேல் போர் விமானங்களை வாங்க, இந்திய அரசு ஏற்கனவே திட்டமிட்டது. அதற்கான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகி விட்டன. சுமார், 58,000 கோடி மதிப்பில் 36 ரபேல் போர் விமானங்கள் வாங்க இந்திய முடிவு செய்துள்ளது. இந்திலையில், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

லடாக் பகுதியில் சீனா இராணுவம், தொடர்ந்துத் தன்னுடையப் படைகளை குவித்த வண்ணம் உள்ளது. அவைகளுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, இந்தியாவும் தன்னுடைய ஆயுதப் பலத்தினை அதிகரித்துக் கொண்டே உள்ளது. இந்த ரபேல் விமானம் இருந்தால், அது இந்திய விமானப்படைக்கு பெரும் பலமாக இருக்கும். அதற்காக அவசரமாக இவை வேண்டும் எனக் கூறியுள்ளது.

அதற்காக 5 போர் விமானங்களை, தற்பொழுது இந்த மாதத்தின் இறுதிக்குள் வழங்க இருக்கின்றோம் என, அதனைத் தயாரிக்கும் டாசால்ட் நிறுவனம் கூறியது. அதன்படி, தற்பொழுது பிரான்ஸ் நாட்டில் இருந்து இந்தியாவிற்கு ரபேல் விமானம் தன்னுடையப் பயணத்தினைத் தொடங்கி உள்ளது. இந்த விமானம், 7364 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய உள்ளது. அதற்கு இடையில், அமீரகத்தின் அல்தர்ஸா விமானப்படை தளத்தில் சிறிது நேரம் நிறுத்தப்படும்.

பின்னர், அங்கிருந்து மீண்டும் இந்தியாவினை நோக்கித் தன்னுடையப் பயணத்தினைத் தொடரும். இந்த விமானத்தினை இந்திய விமானிகளே ஓட்டி வருகின்றனர். மொத்தம் 12 இந்திய விமானிகளுக்கு, இதனை ஓட்டுவதற்குப் பயிற்சி வழங்கப்பட்டு உள்ளது. இந்த விமானங்கள், லடாக் பகுதியில் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட உள்ளன.

HOT NEWS