தர்பார் இசைவெளியீட்டு விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் கோலாகலமாக நடைபெற்றது. அதில், திரைப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதில், நடன இயக்குநரும், ரஜினிகாந்தின் தீவிர ரசிகனுமான ராகவா லாரன்ஸ் மேடையில் பேசினார். அவர் பேசுகையில், சூப்பர்ஸ்டார் அடுத்து என்னிடம் பேசாவிட்டாலும் பரவாயில்லை, ஒரு சில பேரைப் பற்றி பேச உள்ளேன் என்றார்.
திமுக தலைவர் முக ஸ்டாலின் சாரும் சரி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாராக இருந்தாலும் சரி, அவர்கள் தரம் தாழ்ந்து பேசுவது கிடையாது. ஆனால், ஒருவரின் பெயரை நான் கூற விரும்பவில்லை. இனி மேல் யாராவது, தலைவரைப் பற்றி தப்பாக பேசினால், நான் அவர்களுக்குப் பதிலடி தருவேன். சூப்பர்ஸ்டார் ஒரு நல்ல ஆன்மா. அவரைப் போல ஒரு நல்ல ஆன்மாவைக் காண இயலாது.
ரஜினி சார் வீட்டின் முன்பு, ஊனமுற்றவர்கள் வந்து நின்று உதவி கேட்பார்கள் என, என்னுடைய சிறிய வயதில் கேள்விப்பட்டிருக்கின்றேன். அதுவே, தற்பொழுது ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்ய தூண்டிய விஷயம் ஆகும். எனக் கூறினார். சூப்பர் ஸ்டார் படத்தின் பப்ளிசிட்டிக்காக அரசியல் பேசுபவர் அல்ல. ஆனால், அவரைப் பற்றித் தகாத வார்த்தைகளில் பேசி, அரசியல் ஆதாயம் தேடுகின்றனர் எனவும் கூறினார்.
சூப்பர் ஸ்டார் படம் வெளியாகும் பொழுது, அப்பொழுது கமல் சார் படம் வெளியாகி இருந்தால், அவர் போஸ்டர் மீது சாணி அடித்திருக்கிறேன். ஆனால், தற்பொழுது பார்க்கும் பொழுது இவர்கள் இருவரும் இணைந்து இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது.