இந்தியாவின் மிகப் பெரிய எமர்ஜென்சி! ரகுராம் ராஜன் வேதனை!

07 April 2020 அரசியல்
rahuramrajan.jpg

தற்பொழுது உள்ள இந்தியாவின் பொருளாதார நிலையானது, மிகப் பெரிய அவசரமான ஒன்று என, முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தற்பொழுது ஊரடங்கு உத்தரவானது பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால், அடித்தட்டு மக்கள், தினக்கூலி வேலை செய்பவர்கள் உள்ளிட்டப் பலரும் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

இந்நிலையில், தன்னுடைய கருத்தினை தெரிவித்துள்ளார் ரகுராம் ராஜன். அவர் கூறுகையில், இந்தியா தற்பொழுது இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. அமெரிக்கா அல்லது ஐரோப்பா நாடுகள், தங்களுடைய ஜிடிபியில் இருந்து 10% பொதுமக்களுக்காக தற்பொழுது செலவு செய்ய முன் வந்துள்ளன. அதைப் போன்று, இந்தியாவும் முன்வர வேண்டும். ஏற்கனவே, இந்தியப் பொருளாதாரம் சிக்கலான நிலையில் உள்ளது.

எனவே, உடனடியாக மாற்று நடவடிக்கைகளைக் கையாள வேண்டும். அவ்வாறு கையாளாத பட்சத்தில், இந்தியாவின் பொருளாதாரம் கேள்விக்குறியாகி விடும். எனவே, உடனே, அரசாங்கம் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

HOT NEWS