விரைவில் பொருளாதாரத்தை சீரமைக்க வேண்டும்! ரகுராம் ராஜன் பேச்சு!

19 August 2019 அரசியல்
rahuramrajan.jpg

விரைவில் நம் நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்க வேண்டும் என, ரகுராம் ராஜன் பேசியுள்ளார். அவர் சிஎன்பிசி டிவ18 சேனலுக்குப் பேட்டிக் கொடுக்கையில், இது குறித்துப் பேசியுள்ளார்.

2013 முதல் 2016 வரை, இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்தவர், ரகுராம் ராஜன். பதவிக்காலம் முடியும் முன்னே, தன்னுடையப் பதவியை ராஜினாமா செய்தார். அவர் பேசுகையில், இந்தியாவின் பொருளாதாரம் மிகவும் பின்னடவை அடைந்து வருகிறது.

இந்த 2018-2019ம் ஆண்டு நம் நாட்டின் ஜிடிபி 6.8 என்ற நிலையில் உள்ளது. இது மின்னும் குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளன. நாம் விரைவாக சரி செய்ய வேண்டிய காலக்கட்டத்தில் உள்ளோம். இப்பொழுது நாம் சரி செய்யாவிட்டால், நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான நிலையை அடையும். கடந்த 2014-2015ம் ஆண்டின் பொழுது மட்டுமே, இத்தகைய நிலைமை இருந்தது. தற்பொழுது இந்திய பொருளாதாரம் மந்தமான நிலையில் வளர்கின்றது.

உடனடியாக, வங்கி பரிவர்த்தனை முதல் அனைத்தையும் சரி செய்ய வேண்டும். மேலும், வாகன உற்பத்தியை கவனிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

HOT NEWS