இந்திய பொருளாதாரம் மிக மோசமாக மாறும்! ரகுராம் ராஜன் எச்சரிக்கை!

13 October 2019 அரசியல்
rahuramrajan.jpg

இந்திய நாட்டின் பொருளாதாரம், எழ முடியாத நிலையினை அடையும் என, ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவின் முன்னாள் ஆளுநர் திரு. ரகுராம் ராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திட்டமிடப்படாத பணமதிப்பிழப்பு மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத ஜிஎஸ்டி வரிவிதிப்பினால், இந்தியப் பொருளாதாரம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியின் வேகமும், வெகுவாக குறைந்துள்ளது. இதனை சரிபடுத்தும் வகையில், அரசாங்கம் பல சலுகைகளையும், பல முயற்சிகளையும் எடுத்து வருகின்றது. இதற்காக, அரசாங்கம் தன்னுடைய கையில் இருந்து, பணத்தினை செலவழித்து வருகின்றது. ஆனால், நீண்ட நாட்களுக்கு செலவழிக்க இயலாது.

மோடியின் முதல் ஆட்சியில், பெரிய அளவில் பொருளாதார வளர்ச்சி இல்லை. தொலை நோக்குத் திட்டம் இல்லை. அனைத்தையும் அவர் சுமந்த காரணத்தால், பொருளாதாரத்தை அவரால், கவனிக்க இயலவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்ந்து, ரகுராம் ராஜன், மோடி அரசின் மீதும், பொருளாதாரக் பிரச்சனைக் குறித்தும் வெளிநாடுகளில் உள்ள கல்லூரிகளுக்குச் செல்லும் பொழுது, பேசி வருகின்றார்.

timesofindia.indiatimes.com/india/majoritarianism-taking-india-down-dark-and-uncertain-path-rajan/articleshow/71561159.cms

HOT NEWS