போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள நடிகைகளின் செல்போன்களில், ஆபாசப் படங்களும், வீடியோக்களும், புகைப்படங்களும் இருப்பதை போலீசார் கண்டுபிடித்து உள்ளனர்.
கன்னட நடிகை ராகினி திவேதியும், சஞ்சனா கல்ரானி ஆகியோரும் போதைப் பொருள் பயன்படுத்தியதுத் தொடர்பாக, போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம், தீவிர விசாரணையானது நடைபெற்று வருகின்றது. அவர்களுடைய செல்போன்களைப் பறிமுதல் செய்த போலீசார், அதில் ஏதேனும் ஆதாரம் கிடைக்குமா என, சோதனை செய்து வருகின்றனர்.
அதில், இருவருடைய மொபைல் போன்களிலும் உள்ள அழிந்து போன தகவல்களைத் தேடி கண்டுபிடிக்கும் மென்பொருள் பயன்படுத்தப்பட்டது. அதில், பல திடுக்கிடும் விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அதில், ராகினி திவேதியின் மொபைலில் பல ஆபாசப் படங்களும், வீடியோக்களும் இருந்துள்ளன.
அவரை விட, சஞ்சனா கல்ராணியின் மொபைலில் தான் பல விஷயங்கள் இருந்துள்ளன. பல நிர்வாணப் புகைப்படங்கள், பல வீடியோக்கள் மற்றும் வாட்ஸ்ஆப் குரூப்களும் இருந்துள்ளன. அந்தத் தரவுகளை அலசிய போலீசார், இவர் கைதானதும் அந்தக் குரூப்கள் கலைக்கப்பட்டு இருப்பதை கண்டறிந்து உள்ளனர். இவர்கள் விபச்சாரம் உள்ளிட்டவைகளில் ஈடுபட்டனரா எனவும் சோதனை செய்து வருகின்றனர்.