தல அஜித்குமார் நடிப்பில், வெளியாகி ஹிட்டான திரைப்படம் வேதாளம். இந்தப் படத்தின் வில்லனாக ராகுல் தேவ் நடித்திருந்தார். அவர் தற்பொழுது, ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அவருடைய மனைவி ரினா என்பவர், கடந்த 2009ம் ஆண்டு, புற்றுநோயால் மரணமடைந்தார். அதன் பின்னர், ராகுல் தேவ் யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்நிலையில், அவருடைய மகன் சித்தார்த் என்பவரின் வயது 24 ஆகின்றது.
இவ்வாறு இருக்கையில், தன்னை விட, 18 வயது குறைவான, பெண்ணை அவர் காதலிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அது பற்றி அவர் கூறுகையில், பாலிவுட் நடிகையான முக்தா கோட்சேவினை, ஒரு விழாவில் பார்த்ததாகவும், பின்னர் இருவரும் நட்பாக பழகியதாகவும், அது தற்பொழுது காதலாக மாறிவிட்டதாகவும் தெரிவித்தார். விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளார்களாம்.
ராகுல் தேவ்விற்கு தற்பொழுது 51 வயது ஆகின்றது. அதே போல், முக்தா கோட்சேவிற்கு 33 வயது ஆகின்றது. இது குறித்து, பேசிய ராகுல் தேவ், எனக்கும் முக்தாவிற்கும் இடையில், 18 வருட இடைவெளி இருப்பது உண்மை தான். இருவரும் மகிழ்ச்சியாக இருந்தால், இது ஒரு பிரச்சனையாகவே இருக்காது. காதல் என்று வந்துவிட்டால், இது ஒரு மேட்டரே இல்லை என்றுக் கூறியுள்ளார்.