மத்திய அரசைப் பாராட்டியுள்ள ராகுல் காந்தி! எதற்குத் தெரியுமா?

26 March 2020 அரசியல்
rahulgandhioncaa.jpg

ராகுல் காந்திக்கும், பாஜகவிற்கும் ஆகாத நிலையே தற்பொழுது வரை நீடித்து வருகின்றது. ஆளும் பாஜக அரசு எதை செய்தாலும், அதனைக் குறை கூறுவதையே வேலையாக வைத்திருந்தவர் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலவைர் ராகுல் காந்தி. அவர் தற்பொழுது, மத்திய பாஜக அரசினை பாராட்டி உள்ளார்.

இந்தியா முழுவதும், கொரோனா வைஸானது வேகமாகப் பரவி வருகின்றது. இதனால், ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதற்குப் பலரும் தங்களுடைய வரவேற்பினைத் தெரிவித்துள்ளனர். இந்த ஊரடங்கு உத்தரவால், பல ஏழை மற்றும் அடித்தட்டு மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவர் எனக் கூறி வருகின்றனர். பொருளாதார ரீதியாக இந்த ஊரடங்கு உத்தரவானது, அவர்களுடைய வாழ்வில் மாபெரும் தாக்கத்தினை உருவாக்கும் எனவும் கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், இன்று மதியம் செய்தியாளர்களைச் சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொருளாதார அறிவிப்பினை அறிவித்தார். இதனால், பொதுமக்களுக்கு ஓரளவுப் பொருளாதாரப் பிரச்சனைகள் தீரும் என நம்பப்படுகின்றது. இதனை, ராகுல் காந்தி வரவேற்றுப் பாராட்டியுள்ளார்.

தற்பொழுது கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சியில், முதற்கட்டமாக சரியானப் பாதையில் செல்கின்றது. விவசாயிகள், தினக்கூலி ஊழியர்கள், உழைப்பாளிகள், பெண்கள் மற்றும் மூத்தவர்களுக்கு இந்திய நாடு கடன்பட்டுள்ளது என்றுக் கூறியுள்ளது என்றார்.

HOT NEWS