சோபாவில் அமர்வதை விமர்சிக்கின்றீர்கள்! அவர் 8000 கோடி விமானம் வாங்கியுள்ளார்! ராகுல் தாக்கு!

07 October 2020 அரசியல்
rahulgandhitractor.jpg

நான் சோபாவில் அமர்ந்து வருகின்றேன் என கிண்டல் செய்கின்றீர்கள், ஆனால் ஒருவர் 8000 கோடியில் விமானம் வாங்கியிருக்கின்றாரே என, ராகுல் காட்டமாகப் பேசியுள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, தற்பொழுது பஞ்சாபில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அவர்களுடன் இணைந்து, ராகுல் காந்தியும் தற்பொழுது போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார். அந்தப் போராட்டத்தில், டிராக்டரில் அமர்ந்து அவர் போராடினார். அப்பொழுது அந்த டிராக்டரில், அவருக்காக சோபா வைக்கப்பட்டது. அதனை பாஜக அமைச்சர் ஸ்மிருதி இராணி கடுமையாக விமர்சித்தார்.

அதற்குப் பதிலளித்து பேசியுள்ள ராகுல், நான் டிராக்டரில் சோபா வைத்து அமர்ந்து வருகின்றேன் என கிண்டல் செய்கின்றீர்கள். ஆனால், பாரதப் பிரதமரோ, நாடே இக்கட்டான சூழ்நிலையில் இருக்கின்ற நிலையில், 8000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு விமானங்களை வாங்கியுள்ளார். என்மீது அன்புள்ள எவரோ தான், அந்த சோபாவை அந்த டிராக்டரில் பொருத்தியுள்ளார். ஆனால், தன்னுடைய நண்பர் டொனால்ட் ட்ரம்பிற்கு சொகுசு விமானம் உள்ளது என்பதற்காக, தனக்கும் சொகுசு விமானம் வாங்கியுள்ளார் மோடி.

அந்த விமானத்தில், சொகுசு இருக்கைகள் மட்டுமின்றி, சொகுசு படுக்கை வசதிகளும் உள்ளன. அதையெல்லாம் யாரும் பார்ப்பது இல்லை. ஆனால், என்னைக் குறைக் கூறுவதற்கு முதல் ஆளாக வந்துவிடுகின்றீர்கள் என, ராகுல் காந்தி கூறியுள்ளார்.

HOT NEWS