தோற்கடித்த அமேதி தொகுதிக்கு உதவிப் பொருட்களை அனுப்பிய ராகுல்!

05 April 2020 அரசியல்
rahul-wayanadu.jpg

உத்திரப் பிரதேச மாநிலம், அமேதி தொகுதிக்கு மருத்துவப் பொருட்கள் உள்ளிட்ட அவசர கால உதவிப் பொருட்களை, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி அனுப்பி வைத்துள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், அமேதி தொகுதி மற்றும் வயநாடுத் தொகுதியில் போட்டியிட்ட ராகுல்காந்தி, அமேதி தொகுதியில் தோல்வியினைச் சந்தித்தார். இது அவருக்குப் பெருத்த அவமானமாக அமைந்தது. இதனையடுத்து, அப்பகுதி மக்களுக்கு எப்பொழுதும் துணையாக இருப்பேன் எனக் கூறினார்.

இந்நிலையில், இந்தியா முழுவதும் கொரோனா வைரஸானது பரவி வருகின்றது. இதனால், ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனை முன்னிட்டு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையானது பாதிக்கப்பட்டு உள்ளது. தங்களால் இயன்ற உதவியினை, அரசியல்வாதிகள் செய்து வருகின்றனர்.

தான் தோற்ற அமேதி தொகுதிக்கு, தாராள மனதுடன் மருத்துவப் பொருட்களை, ராகுல் காந்தி அனுப்பி வைத்துள்ளார். தற்பொழுது வரை 12,000 சானிட்டைசர்ஸ், 20,000 மாஸ்க்குகள், 10,000 சோப்புகள் உள்ளிட்டவைகளை அனுப்பி வைத்துள்ளார். இதனை அம்மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் பிரதீப் சிங்கால் கூறியுள்ளார். மேலும், ஒரு பெரிய டிரக் நிறைய அரிசி கோதுமை உள்ளிட்டவைகளையும் அவர் அனுப்பி வைத்துள்ளார் எனக் குறிப்பிட்டார்.

HOT NEWS