ராகுல் விரைவில் தலைமை ஏற்க வரவேண்டும்! கட்சியினர் கோரிக்கை!

11 March 2020 அரசியல்
rahulgandhicongress.jpg

விரைவில் காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக, ராகுல்காந்தி பொறுப்பேற்க வேண்டும் என, காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தற்பொழுது மத்தியப் பிரதேசத்தில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினரான சிந்தியா பதவி விலகியுள்ளார். மேலும், அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் விலகிவிட்டார். இதனால், காங்கிரஸ் கட்சியின் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், நிலையான தலைமை தேவையென, கர்நாடகா மாநிலத்தின் முக்கியத் தலைவரான தினேஷ் குண்டோ ராவ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, தன்னுடைய டிவிட்டர் கணக்கின் மூலம் கருத்துத் தெரிவித்துள்ள ராவ், மத்தியப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள குழப்பத்தில் இருந்து ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகின்றது. ராகுல்காந்தி தற்பொழுது, தலைமை ஏற்று வழிநடத்த வேண்டும். கட்சியின் மூத்த தலைவர்கள், அதற்கேற்றவாறு தலைமையினை சரி செய்ய வேண்டும். மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்றது போல, இனி ஒரு செயல் நடைபெறக் கூடாது.

காங்கிரஸ் அவருக்குத் தேவை. அவர் காங்கிரஸிற்குத் தேவை. ஆதலால், விரைவில் அவர் தலைவராக பதவியேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அவருடையக் கருத்திற்கு, தாரிக் அன்வரும் ஆதரவினைத் தெரிவித்துள்ளார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்த காங்கிரஸ் கட்சியானது, எதிர்கட்சி அந்தஸ்தினைக் கூடப் பெற இயலவில்லை. இதனால், அக்கட்சியின் தோல்விக்குப் பொறுப்பேற்று, தன்னுடையத் தலைவர் பதவியினை, ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். இதனையடுத்து, அவருக்குப் பதிலாக அடுத்தத் தலைவரை நியமிக்கும் வரை, தற்காலிகத் தலைவராக சோனியா காந்தி செயல்பட்டு வருகின்றார்.

HOT NEWS