லடாக் மக்கள் சொல்வதைக் கேளுங்கள்! மோடியை வலியுறுத்தும் ராகுல்!

04 July 2020 அரசியல்
rahulgandhicovid19.jpg

லடாக் பகுதியில் வசிக்கின்ற மக்களின் குரலை செவிமடுத்துக் கேளுங்கள் என, காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் 15ம் தேதி அன்று, இந்தியாவின் எல்லையில் இருந்து வீரர்களுடன், சீன வீரர்கள் கைகலப்பில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, இந்தியாவின் தரப்பில் 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீனாவின் தரப்பில் 40 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக, கூறப்பட்டு உள்ளது. இந்தப் பிரச்சனையின் காரணமாக, இரு நாட்டு எல்லையிலும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

இந்த சூழ்நிலையில், லடாக் பகுதியில் சீன இராணுவம் ஊடுறுவியுள்ளதாக லடாக் பகுதியில் வசிப்பவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனிடையே, நேற்று லடாக் பகுதியில் உள்ள இந்திய இராணுவ வீரர்களை மோடி சந்தித்துப் பேசினார். இதனிடையே இது குறித்து, ராகுல் காந்தி தற்பொழுது கருத்துத் தெரிவித்துள்ளார்.

லடாக் பகுதியில் உள்ள மக்கள், சீன இராணுவம் அத்துமீறி ஊடுறுவியுள்ளதாக கூறியுள்ளார். ஆனால், நம் நாட்டின் எல்லைக்குள் யாரும் ஊடுறுவவில்லை என பிரதமர் மோடி கூறியுள்ளார். இவர்களில் ஒருவர் கூறுவது தான் உண்மை மற்றொருவர் கூறுவது பொய் எனக் கூறியுள்ளார். மேலும், சிலர் வெளியிட்ட வீடியோக்களையும் பகிர்ந்து வருகின்றார்.

தற்பொழுது, மீண்டும் ஒரு வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், தேசப்பற்றுள்ள லடாக் பகுதி மக்கள் சீன இராணுவம் ஊடுறுவியிருப்பதாக கூறுகின்றனர். தயவு செய்து அவர்களின் குரலைக் கேளுங்கள். இல்லையென்றால், கண்டிப்பாக அதற்கான விலையினை நாம் கொடுக்க வேண்டி இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

HOT NEWS