சமூக வலைதளங்களான வாட்ஸ்ஆப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்டவைகளை, ஆளும் பாஜக அரசும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் கட்டுப்படுத்துவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
இது குறித்து தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, இந்தியாவில் உள்ள பேஸ்புக் மற்றும் வாட்ஸ்ஆப் ஆகிய சமூக வலைதளங்களை ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக முழுமையாகக் கட்டுப்படுத்தி, போலியான செய்திகளை உலா வரச் செய்கின்றது எனவும், அதன் உண்மை நிலையினை அமெரிக்க ஊடகங்கள் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளன எனவும் ஆதரமாக ஒரு செய்தித்தாளின் பக்கத்தினைப் பதிவேற்றம் செய்து விளக்கியுள்ளார்.