முறையற்ற பொருளாதார நிர்வாகம்! லட்சக்கணக்கான இந்தியக் குடும்பங்கள் அழியும்!

08 July 2020 அரசியல்
rahulgandhidelhi.jpg

முறையற்ற மற்றும் திட்டமிடாத பொருளாதார நிர்வாகத்தின் காரணமாக, இந்தியாவின் பல லட்சக்கணக்கான குடும்பங்கள் அழியும் என ராகுல் காந்தி குற்றம்சாட்டி வருகின்றார்.

கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்ததில் இருந்து, தொடர்ந்து மத்திய அரசினை கண்டித்தும், எச்சரித்தும் தன்னுடையக் கருத்துக்களை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, அரசாங்கம் ஊரடங்கு விஷயத்தில் சொதப்பி விட்டதாகக் கூறி வருகின்றார். ஏழை எளிய மக்களுக்கு, 7,500 ரூபாயினை மாதா மாதம் உதவித் தொகையாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்டப் பல விஷயங்களைக் கூறி வருகின்றார்.

மத்திய அரசு கொண்டு வந்த ஊரடங்கானது, கொரோனா வைரஸைக் குறைப்பதற்குப் பதில், இந்தியப் பொருளாதாரத்தினை குறைத்து விட்டது எனவும், சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால், கொரோனாவும் குறையவில்லை அதே போல், பொருளாதாரமும் வெகுவாகப் பாதிக்கப்பட்டு உள்ளது என்றுக் கூறியுள்ளார்.

இந்த சூழ்நிலையில், தற்பொழுது புதியக் கருத்து ஒன்றினையும் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சிகாக்கோ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வுக் குறித்து அவர் பதிவிட்டுள்ளார். அதில், இந்தியாவில் கொரோனாவினைக் கட்டுப்படுத்தக் கொண்டு வந்த லாக்டவுனால், பத்தில் எட்டு இந்தியக் குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் எனவும், கடைநிலையில் உள்ள நடுத்தர குடும்பத்தினைச் சேர்ந்தவர்கள், வேலைவாய்ப்பினை இழப்பர் எனவும் கூறியுள்ளது.

மேலும், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பொருளாதாரம் பின்னோக்கிச் சென்றுவிடும் எனவும், வறுமை அதிகரிக்கும் எனவும் கூறியிருப்பதை ராகுல் காந்தி சுட்டிக் காட்டி உள்ளார்.

HOT NEWS