ராகுல்காந்தி தேர்ச்சி பெற ஆர்வம் இல்லாதவர்! ஒபாமா தன்னுடைய புத்தகத்தில் பதிவு!

13 November 2020 அரசியல்
obamarahulgandhi.jpg

ராகுல் காந்தி அரைகுறை ஆர்வம் உள்ளவர் எனவும், முழுமையாக தேர்ச்சி பெற ஆர்வம் இல்லாதவர் எனவும், அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்து உள்ளார்.

அமெரிக்காவில் தற்பொழுது அதிபர் தேர்தல் நடைபெற்று உள்ளது. இந்த தேர்தலில் முன்னாள் அதிபர் ஒபாமாவின் கட்சியானது, நல்லதொரு வெற்றியினைப் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, அதிபர் ஒபாமா தி ப்ராமிஸ்டு லேண்ட் (ஒரு உறுதியளிக்கப்பட்ட நிலம்) என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றினை வெளியிட்டு உள்ளார்.

அந்தப் புத்தகத்தில் பல விஷயங்களை அவர் வெளியிட்டு உள்ளார். அந்தப் புத்தகத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பற்றியும், ராகுல் காந்தி பற்றியும் குறிப்பிட்டு உள்ளார். அதில், மன்மோகன் சிங்கும், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பாப் கேட்ஸ் ஆகியோர் உணர்ச்சியற்ற மனிதர்களாகவே இருக்கின்றனர் என்றுக் கூறியுள்ளார். அத்துடன், தான் ராகுல் காந்தியினை சந்தித்தது குறித்தும் பேசியுள்ளார்.

அதில் ராகுல்காந்தி, தன்னை பாடங்களை படித்து ஆசிரியரைக் கவர விரும்புகின்ற மாணவனைப் போல் ஆர்வமாக இருந்தார். அவர் ஒரு பதற்றமான, அறியப்படாத குணம் கொண்டவர். உண்மையில் அவருக்கு ஆழமாக எந்த ஒரு விஷயத்திலும், தேர்ச்சி பெறும் எண்ணம் இல்லை என்றுக் கூறியுள்ளார். இது தற்பொழுது வைரலாகி வருகின்றது.

HOT NEWS