பாஜகவில் அவருக்கு மரியாதையே இருக்காது! ராகுல் காந்தி விமர்சனம்!

13 March 2020 அரசியல்
rahulgandhioncaa.jpg

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்து வந்த, ஜோதிராதித்யா சிந்தியா தற்பொழுது பாஜகவில் இணைந்துள்ளார். அவருக்கு, இட ஒதுக்கீடும் தற்பொழுது செய்துள்ளது பாஜக அரசு.

அதுகுறித்து இதுவரை பேசாமல் இருந்து வந்த காங்கிரஸ் கட்சியானது, தற்பொழுது மவுனம் கலைத்துள்ளது. நேற்று முன்தினம், செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் கூறாமல், ராகுல்காந்தி சென்றுவிட்டார். இதனிடையே, இன்று செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்துள்ளார்.

அவர் பேசுகையில், சிந்தியா என்னுடைய நீண்ட நாள் நண்பர். தான் எடுத்த உறுதிப்பாட்டில் இருந்து மாறியுள்ளார். அவருடைய மாற்றத்தால், அவருக்கு ஏமாற்றமே மிஞ்சும். அவர் தற்பொழுது ஆர்எஸ்எஸ்-பாஜக கூட்டணிக்குச் சென்றுள்ளார். இதனால், அவருக்கு ஒன்றும் கிடைக்காது. அங்கு அவருக்குரிய மரியாதையும், அங்கீகாரமும், மன நிம்மதியும் கிடைக்காது எனக் கூறியுள்ளார்.

HOT NEWS