லாக்டவுன் தோல்வி! வெளிப்படையாக கேள்வி கேட்ட ராகுல் காந்தி!

26 May 2020 அரசியல்
rahulgandhicovid19.jpg

இன்று ஆன்லைன் வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம், செய்தியாளர்களிடமும் நாட்டு மக்களிடமும் உரையாற்றினார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி.

அவர் பேசுகையில், இந்த ஊரடங்கானது முற்றிலும் தோல்வியிலேயே முடிந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம், பிரதமர் மோடி பேசுகையில், அடுத்த 21 நாட்களில் கொரோனா வைரஸை ஒழிப்போம் என்று கூறினார். அப்பொழுது 496 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு இருந்தனர். 9 பேர் உயிரிழந்து இருந்தனர். தற்பொழுது 1.4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 4000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

தற்பொழுது உள்ள கேள்வி என்னவென்றால், அடுத்து என்ன என்பது தான். சுகாதாரத்திலும், பொருளாதாரத்திலும் சம அளவு வேண்டும் என்று, பல தளர்வுகளை இந்த ஊரடங்கில் மத்திய அரசு அறிவித்தது.

இதனால், பாதிப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது. இந்தியாவினை மீண்டும் செயல்பட வைக்க என்ன திட்டம் உள்ளது? நோய் தொற்றைக் கட்டுப்படுத்து என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன? புலம்பெயரும் தொழிலாளர்களுக்காக என்ன திட்டங்கள் உள்ளன? தொழில்நிறுவனங்களை மீட்க என்ன திட்டங்கள் உள்ளன? என அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டுள்ளார் ராகுல் காந்தி.

இந்தியாவின் ஜிடிபியின் மதிப்பில் ஒரு சதவிகிதம் என்ற அளவில், 20 லட்சம் கோடியில் பல திட்டங்களை நிதியமைச்சர் அறிவித்தார். ஆனால், அவைகளில் பெரும்பாலும் கடன் உதவிகளே உள்ளன. மக்களின் கைக்கு பணம் நேரடியாகச் செல்வதற்காக எதையாவது செய்துள்ளீர்களா? பாதிக்கப்பட்டவர்களின் வாழ்விற்காக என்ன செய்ய உள்ளீர்கள்? எனக் கேள்விக் கேட்டுள்ளார்.

மேலும் மஹாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சிக்கு முடிவு எடுக்கும் உரிமை இல்லை எனவும், சிவசேனா தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகின்றது எனவும் அவர் கூறியுள்ளார். இதனை, இந்தியாவின் பலரும் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசி வருகின்றனர்.

HOT NEWS