நிவாரண நிதி குறித்து கணக்கிட வேண்டும்! ராகுல் அறிவுறுத்தல்!

10 May 2020 அரசியல்
rahulgandhidelhi.jpg

நிவாரண நிதி குறித்து, முறையான தணிக்கையினை பிரதமர் மோடி செய்ய வேண்டும் என, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. இதனால் வருகின்ற மே-17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பிற்காக, பிரதமர் பிஎம்கேர்ஸ் என்ற நிவாரண நிதிக்கான கணக்கினை வெளியிட்டார். பல நிறுவனங்களும், அரசு அமைப்புகளும் தங்களுடைய சார்பாக பெருமளவிற்கு, பணத்தினை கொடுத்துள்ளன.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், பெருமளவிற்கு பிரதமர் மோடியின் பிஎம்கேர்ஸ் கணக்கிற்கு, நிவாரண நிதி திரண்டது. இருப்பினும், இது குறித்து பிரதமர் மோடி, எதுவும் கூறவில்லை. அந்தப் பணத்தினை, கொரோனா வைரஸிற்குப் பயன்படுத்துவது குறித்தும் அவர் வாய் திறக்கவில்லை. இது எதிர்கட்சிகளுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது.

இதனிடையே, நேற்று தன்னுடைய டிவிட்டர் கணக்கில் கருத்துத் தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி. அதில், ரயில்வே மற்றும் பலப் பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து, பெருமளவிற்கு பிஎம்கேர்ஸ் கணக்கிற்கு நிவாரண நிதி வந்துள்ளது. அதனை முறையாக தணிக்கை செய்ய வேண்டும்.

மேலும், அவ்வாறு தணிக்கை செய்யப்பட்ட பணமானது, பொதுமக்களுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதும் உறுதி செய்யப்பட வேண்டும் என்றுக் கூறியுள்ளார். இது தற்பொழுது, விவாதப் பொருளாக மாறியுள்ளது.

HOT NEWS