கிரிக்கெட் விளையாடிய ராகுல் காந்தி! வைரலாகும் வீடியோ!

19 October 2019 சினிமா
rahulcricket.jpg

மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் தேர்தல் நடக்கவிருப்பதையடுத்து, அங்கு காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக, வாக்கு சேகரித்து வருகிறார் ராகுல் காந்தி.

இந்நிலையில், நேற்று ஹரியானா மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்குப் பதிலாக, ராகுல் காந்தி கலந்து கொண்டார். பின்னர், தேர்தல் பிரச்சாரம் முடிந்ததும், ஹெலிகாப்டரில் ஏறி, டெல்லிப் புறப்பட்டார்.

அவர் கிளம்பிய சிறிது நேரத்திலேயே, மோசமான வானிலைக் காரணமாக அருகில் இருந்த தனியார் கல்லூரியில் ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது. அப்பொழுது, அங்கு விளையாடிக் கொண்டிருந்த மாணவர்களுடன் இணைந்து கொண்ட ராகுல் காந்தி, அவர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடினார். இது தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

HOT NEWS