பரிசோதனை கருவிகளுக்கு தட்டுப்பாடு! ராகுல்காந்தி கருத்து!

15 April 2020 அரசியல்
rahulgandhioncaa.jpg

இந்தியாவில், கொரோனா வைரஸ் இருப்பதை பரிசோதனை செய்யும் கருவிக்கு, தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கருத்துத் தெரிவித்து உள்ளார்.

அவருடைய டிவிட்டர் பதிவில், பரிசோதனைக் கருவிகளை வாங்கும் செயலில் இந்தியா தாமதமாக செயல்பட்டு வருகின்றது. இதனால், பத்து லட்சம் பேருக்கு வெறும் 149 கருவிகளே இருக்கின்றன. இது மிகவும் மோசமான ஒன்றாகும்.

உலகிலேயே, குறைந்த பரிசோதனை வசதிகளைக் கொண்டுள்ள நாடுகளான லாவாஸ் (157), நைஜர் (182), ஹோண்டுராஸ் (162) என்ற வரிசையில் இந்திய நாடும் இணைந்துள்ளது என வேதனைத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், அதிக மக்களுக்கு பரிசோதனை செய்ய வேண்டிய சூழ்நிலையில், நாம் இருக்குமிடம் தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

HOT NEWS