என் பேச்சில் பொய் இல்லை! அமித் ஷா பேச்சில் உண்மை இல்லை! ராகுல் தாக்கு!

06 February 2020 அரசியல்
rahulgandhidelhi.jpg

என் பேச்சில் பொய் என்பது இருக்காது எனவும், அமித் ஷா பேச்சில் உண்மை என்பது இருக்காது எனவும், ராகுல் காந்தி பேசியுள்ளார்.

டெல்லியில் இன்றுடன் (06-02-2020) தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வருகின்றது. இதனால், ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பாஜகவினர், தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருவருர் மற்றொருவரை கடுமையாக விமர்சித்தும், தாக்கியும் பேசி வருகின்றனர்.

நேற்று டெல்லியில், தன்னுடைய மூன்றாம் கட்டப் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி ஈடுபட்டார். அவர் அப்பொழுது, தொண்டர்கள் முன் பேசினார். நான் கந்நத 15 ஆண்டுகளாக அரசியலில் உள்ளேன். இதுவரை, பல மேடைகளில் பேசியிருக்கின்றேன். பல விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துள்ளேன். ஆனால், அதில் எவ்வித பொய்யும் இருக்காது. ஆனால், அமித் ஷா பேசும் பேச்சு சுத்தமான பொய்.

அதில் எவ்வித உண்மையும் இல்லை. மிகவும் முட்டாள்தனமாக இருக்கும். அப்படித் தான் மோடியும் பேச்சும், அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சும் உள்ளது. அவர்களின் பேச்சுக்களில், அர்த்தம் இருக்காது. அவர்கள் பேசுவதைக் கேட்பதில் ப்ரயோஜனம் இல்லை. விவசாயிகள் என்னை சந்தித்த பொழுது, நான் விவசாயிகளின் 72,000 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்ய சொன்னேன். காங்கிரஸ் ஆட்சியின் பொழுது, பத்து முதல் பதினைந்து நாட்களுக்குள் நான் சொன்னது போலவே, விவசாயிகளின் கடனை மன்மோகன் சிங் தள்ளுபடி செய்தார்.

காங்கிரஸ் தில்லியில் ஆட்சிக்கு வந்ததும், கல்யாண்புரி பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகள் அனைத்தும் அகற்றப்பட்டு, சுத்தமாக மாற்றப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

HOT NEWS